நளி கடல் இருங் குட்டத்து

புறநானூறு

நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்
களிறு சென்று களன் அகற்றவும்
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி
அரைசு பட அமர் உழக்கி
உரை செல முரசு வெளவி
முடித் தலை அடுப் பாகப்
புனல் குருதி உலைக் கொளீஇத்
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே

மாங்குடி கிழவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

Next Post

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

Related Posts

இன்று செலினுந் தருமே சிறுவரை

புறநானூறு இன்று செலினுந் தருமே சிறுவரைநின்று செலினுந் தருமே பின்னும்முன்னே தந்தனென் என்னாது துன்னிவைகலும் செலினும் பொய்யலன் ஆகியாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்தான்வேண்டி யாங்குத்…
Read More

புறவின் அல்லல் சொல்லிய கறையடி

புறநானூறு புறவின் அல்லல் சொல்லிய கறையடியானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்கோல்நிறை துலாஅம் புக்கோன் மருகஈதல்நின் புகழும் அன்றே சார்தல்ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்தூங்கெயில் எறிந்தநின்…
Read More

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

புறநானூறு நன் றாய்ந்த நீள் நிமிர்சடைமுது முதல்வன் வாய் போகாதுஒன்று புரிந்த ஈரி ரண்டின்ஆறுணர்ந்த ஒரு முதுநூல்இகல் கண்டோர் மிகல் சாய்மார்மெய் அன்ன பொய்…
Read More
Exit mobile version