செஞ்ஞா யிற்றுச் செலவும்

புறநானூறு

செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப் பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அழல் புரிந்த அடர் தாமரை

Next Post

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

Related Posts

அன்ன வாக நின் அருங்கல வெறுக்கை

புறநானூறு அன்ன வாக நின் அருங்கல வெறுக்கைஅவை பெறல் வேண்டேம் அடுபோர்ப் பேகசீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புலநன்னாடு பாட என்னை நயந்துபரிசில் நல்குவை…
Read More

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

புறநானூறு எங்கோ னிருந்த கம்பலை மூதூர்உடையோர் போல விடையின்று குறுகிச்செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்துவான நாண…
Read More
Exit mobile version