பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்

புறநானூறு

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை எ·கம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே
வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக்
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே

கோவூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *