ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்

புறநானூறு

ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்து உறுத்து ஆற்ற இருந்தென மாகச்
சென்மோ பெரும எம் விழவுடை நாட்டு என
யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது
அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
இருநிலம் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்
சேயை யாயினும் இவணை யாயினும்
இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ
சிறுநனி ஒருவழிப் படர்க என் றோனே எந்தை
ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
இருங்கோள் ஈராப் பூட்கைக்
கரும்பன் ஊரன் காதல் மகனே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *