புறநானூறு
ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
தன்புகழ் ஏத்தினெ னாக ஊன்புலந்து
அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்
கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்
பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழை அணி வாரா
ஒண்பூங் கலிங்கம் உடீ இ நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
எற் பெயர்ந்த நோக்கி _______________
__________________________ கற்கொண்டு
அழித்துப் பிறந்ததென னாகி அவ்வழிப்
பிறர் பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே
குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
நரைமுக வூகமொடு உகளும் சென____
_______________கன்றுபல கெழீ இய
கான்கெழு நாடன் நெடுந்தேர் அவியன் என
ஒருவனை உடையேன் மன்னே யானே
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே
மாறோக்கத்து நப்பசலையார்
Leave a Reply Cancel reply