கடல் படை அடல் கொண்டி

புறநானூறு

கடல் படை அடல் கொண்டி
மண் டுற்ற மலிர் நோன்றாள்
தண் சோழ நாட்டுப் பொருநன்
அலங்கு உளை அணி இவுளி
நலங் கிள்ளி நசைப் பொருநரேம்
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
அவற் பாடுதும் அவன் தாள் வாழிய என
நெய் குய்ய ஊன் நவின்ற
பல்சோற்றான் இன் சுவைய
நல் குரவின் பசித் துன்பின் நின்
முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்
யானும் ஏழ்மணி யங்கேள் அணிஉத்திக்
கட்கேள்விக் சுவை நாவின்
நிறன் உற்ற அரா அப் போலும்
வறன் ஒரீ இ வழங்கு வாய்ப்ப
விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
நினதே முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய
எனதே கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
எறிதொறும் நுடங்கி யாங்கு நின் பகைஞர்
கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர் பிறர் வேத்தவை யானே

கோவூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *