கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

புறநானூறு

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்
பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்
துளங்கு இயலாற் பணை எருத்தின்
பா வடியாற்செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கடுங்கண்ண கொல் களிற்றால்

Next Post

வினை மாட்சிய விரை புரவியடு

Related Posts

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

புறநானூறு ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராதுஇலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்தவல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்முதுகுமெய்ப் புலைத்தி போலத்தாவுபு தெறிக்கும்…
Read More

இரங்கு முரசின் இனம் சால் யானை

புறநானூறு இரங்கு முரசின் இனம் சால் யானைமுந்நீர் ஏணி விறல்கெழு மூவரைஇன்னும் ஓர் யான் அவாஅறி யேனேநீயே முன்யான் அரியு மோனே துவன்றியகயத்திட்ட வித்து…
Read More
Exit mobile version