காலனும் காலம் பார்க்கும் பாராது

புறநானூறு

காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

Next Post

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

Related Posts

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

புறநானூறு வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகிநெடிய என்னாது சுரம்பல கடந்துவடியா நாவின் வல்லாங்குப் பாடிப்பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்திஓம்பாது உண்டு கூம்பாது வீசிவரிசைக்கு வருந்தும்இப்…
Read More

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

புறநானூறு ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலேஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவதுஇல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல்…
Read More

வினை மாட்சிய விரை புரவியடு

புறநானூறு வினை மாட்சிய விரை புரவியடுமழை யுருவின தோல் பரப்பிமுனை முருங்கத் தலைச்சென்று அவர்விளை வயல் கவர்பு ஊட்டிமனை மரம் விறகு ஆகக்கடி துறைநீர்க்…
Read More
Exit mobile version