எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

புறநானூறு

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே
விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
என்னா வதுகொல் தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே

பரணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

Next Post

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

Related Posts

நீரறவு அறியா நிலமுதற் கலந்த

புறநானூறு நீரறவு அறியா நிலமுதற் கலந்தகருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழைமெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்தொடலை ஆகவும் கண்டனம் இனியேவெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்துஒறுவாய்ப் பட்ட…
Read More

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்

புறநானூறு கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்கழல்புனை திருந்துஅடிக் காரி நின் நாடேஅழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவேவீயாத் திருவின் விறல் கெழு தானைமூவருள்…
Read More

செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்

புறநானூறு செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோபாடுநர் போலக் கைதொழுது ஏத்திஇரந்தன்று ஆகல் வேண்டும் பொலந்தார்மண்டமர் கடக்கும் தானைத்திண்தேர் வளவற் கொண்ட…
Read More
Exit mobile version