ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்

புறநானூறு

ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்
கவிகை மண்ணாள் செல்வ ராயினும்
வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்
வரலதோறு அகம் மலர
ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
காண்டற்கு அரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுதல் இனியே
அற்றன் றாகலின் தெற்றெனப் போற்றிக்
காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி
வருத லானார் வேந்தர் தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றுஇவர் மறனும் இற்றால் தெற்றென
யாரா குவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல்சுணங்கு அணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *