புறநானூறு
கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
ஏனோர் மகள்கொல் இவள் என விதுப்புற்று
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
திருநயத் தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம்
தன்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்
பெறாஅ மையின் பேரமர் செய்தலின்
கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சி யவர் இவள் தன்னை மாரே
அரிசில் கிழார்
Leave a Reply Cancel reply