புறநானூறு
களிறு அணைப்பக் கலங்கின காஅ
தேர்ஓடத் துகள் கெழுமின தெருவு
மா மறுகலின் மயக்குற்றன வழி
கலங் கழாஅலின் துறை கலக்குற்றன
தெறல் மறவர் இறை கூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினும் அன்னோ
என்னா வதுகொல் தானே
பன்னல் வேலிஇப் பணைநல் லூரே
Leave a Reply Cancel reply