போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்

புறநானூறு

போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
பறையடு தகைத்த கலப்பையென் முரவுவாய்
ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்
குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்
கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப
வருகணை வாளி__________ அன்பின்று தலைஇ
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை
வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்
குறைத்தலைப் படுபிணன் எதிரப் போர்பு அழித்து
யானை எருத்தின் வாள்மட லோச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
மதியத் தன்ன என் விசியுறு தடாரி
அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கைப்
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும
களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள்
குடர்த்தலை மாலை சூடி உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் பல என
உருகெழு பேய்மகள் அயரக்
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே

கல்லாடனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *