தூங்கு கையான் ஓங்கு நடைய

புறநானூறு

தூங்கு கையான் ஓங்கு நடைய
உறழ் மணியான் உயர் மருப்பின
பிறை நுதலான் செறல் நோக்கின
பா வடியால் பணை எருத்தின
தேன் சிதைந்த வரை போல
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து
அயறு சோரூம் இருஞ் சென்னிய
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்கப்
பாஅல் நின்று கதிர் சோரும்
வான உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல
வேறு வேறு பொலிவு தோன்றக்
குற் றானா உலக் கையால்
கலிச் சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டுப் பைந் தும்பை
மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரில் பெயர்பு பொங்க
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறைக் காப் பாள
வேந்து தந்த பணி திறையாற்
சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்
ஓங்கு கொல்லியோர் அடு பொருந
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்
வாழிய பெரும நின் வரம்பில் படைப்பே
நிற் பாடிய அலங்கு செந்நாப்
பிற்பிறர் இசை நுவ லாமை
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு வந்து
இனிது காண்டிசின் பெரும முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
சோறுயட நடத்தி நீ துஞ்சாய் மாறே

குறுங்கோழியூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *