புறநானூறு
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக
வல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும் வல்லே
நின்வயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
பறை இசை அருவி முள்ளூர்ப் பொருநர்
தெறலரு மரபின் நின் கிளையடும் பொலிய
நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன்
இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப்
பரந்து இசை நிறகப் பாடினன் அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ் வழிப்
பிறகலம் செல்கலாது அனையேம் அத்தை
இன்மை துரப்ப அசை தர வந்து நின்
வண்மையின் தொடுத்தனம் யாமே முள்ளெயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப
அண்ணல் யானையடு வேந்து களத்து ஒழிய
அருஞ் சமம் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே
மாறோக்கத்து நப்பசலையார்
Leave a Reply Cancel reply