கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

புறநானூறு

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்
குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல் வாழ்க அவன் கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனனே வயின் வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

Next Post

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

Related Posts

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

புறநானூறு நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றேமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்அதனால் யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே மோசிகீரனார்
Read More

ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்

புறநானூறு ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்இன்னாது…
Read More

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்

புறநானூறு ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்பாடிப் பெற்ற பொன்னணி யானைதமர்எனின் யாவரும் புகுப அமர்எனின்திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்கண்மாறு நீட்ட…
Read More