மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

புறநானூறு

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் – சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்
திறன்இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும் மன்எயில் ஆந்தையும் உரைசால்
அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப் பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே

பூதப்பாண்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண

Next Post

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

Related Posts

அன்ன வாக நின் அருங்கல வெறுக்கை

புறநானூறு அன்ன வாக நின் அருங்கல வெறுக்கைஅவை பெறல் வேண்டேம் அடுபோர்ப் பேகசீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புலநன்னாடு பாட என்னை நயந்துபரிசில் நல்குவை…
Read More

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

புறநானூறு முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்றகளங்கொள் யானைக் கடுமான் பொறையவிரிப்பி னகலுந்…
Read More

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

புறநானூறு இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்மடவரல் உண்கண் வாள்நதல் விறலிபொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு எனவினவல் ஆனாப் பொருபடை வேந்தேஎறிகோல் அஞ்சா…
Read More