நளிஇரு முந்நீர் ஏணி யாக

புறநானூறு

நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
அரசுஎனப் படுவது நினதே பெரும
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்
தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடுஎனப் படுவது நினதே அத்தை ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவல் எனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்
அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின் நின்
அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே

வெள்ளைக்குடி நாகனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

Next Post

அடுநை யாயினும் விடுநை யாயினும்

Related Posts

குன்றும் மலையும் பலபின் ஒழிய

புறநானூறு குன்றும் மலையும் பலபின் ஒழியவந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு எனநின்ற என்நயந்து அருளி ஈது கொண்டுஈங்கனம் செல்க தான் என என்னையாங்குஅறிந் தனனோ…
Read More

மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

புறநானூறு மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்கேட்பின் அல்லது காண்பறி யலையேகாண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்கலவ…
Read More

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

புறநானூறு சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்புலி சேர்ந்து போகிய கல்அளை போலஈன்ற வயிறோ இதுவேதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே…
Read More