Author: Pulan

  • அறையும் பொறையும் மணந்த தலைய

    புறநானூறு

    அறையும் பொறையும் மணந்த தலைய
    எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
    தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-
    கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
    தேர்வண் பாரி தண் பறம்பு நாடே

    கபிலர்

  • மைம் மீன் புகையினும் தூமம் தோன்றினும்

    புறநானூறு

    மைம் மீன் புகையினும் தூமம் தோன்றினும்
    தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
    வயல்அகம் நிறையப் புதற்பூ மலர
    மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
    ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்
    கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
    பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
    பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
    பாசிலை முல்லை முகைக்கும்
    ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே

    கபிலர்

  • தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்

    புறநானூறு

    தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
    கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்
    ஏந்தெழில் மழைக் கண் இன் நகை மகளிர்
    புன் மூசு கவலைய முள் முடை வேலிப்
    பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
    பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
    ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
    உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ
    நோகோ யானே தேய்கமா காலை
    பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும்
    கலையுங் கொள்ளா வாகப்பலவும்
    காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
    யாணர் அறாஅ வியன்மலை அற்றே
    அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை
    பெரிய நறவின் கூர் வேற் பாரியது
    அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
    வலம் படுதானை வேந்தர்
    பொலம் படைக் கலிமா எண்ணு வோரே

    கபிலர்

  • ஒரு சார் அருவி ஆர்ப்ப ஒரு சார்

    புறநானூறு

    ஒரு சார் அருவி ஆர்ப்ப ஒரு சார்
    பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
    வாக்க உக்க தேக் கள் தேறல்
    கல்அலைத்து ஒழுகும் மன்னே பல் வேல்
    அண்ணல் யானை வேந்தர்க்கு
    இன்னான் ஆகிய இனியோன் குன்றே

    கபிலர்

  • ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும் சிறு வரை

    புறநானூறு

    ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும் சிறு வரை
    சென்று நின் றோர்க்கும் தோன்றும் மன்ற
    களிறு மென்று இட்ட கவளம் போல
    நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
    வார் அசும்பு ஒழுகு முன்றில்
    தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே

    கபிலர்

  • மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்

    புறநானூறு

    மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்
    அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
    பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
    நட்டனை மன்னோ முன்னே இனியே
    பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
    நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
    சேறும் – வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
    கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்
    நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே

    கபிலர்

  • அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்

    புறநானூறு

    அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
    எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
    இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
    வென்று எறி முரசின் வேந்தர் எம்
    குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

    பாரி மகளிர்

  • அளிதோ தானே பேரிருங் குன்றே

    புறநானூறு

    அளிதோ தானே பேரிருங் குன்றே
    வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
    நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
    கிணை மகட்கு எளிதால் பாடினள் வரினே

    கபிலர்

  • கடந்து அடு தானை மூவிரும் கூடி

    புறநானூறு

    கடந்து அடு தானை மூவிரும் கூடி
    உடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதே
    முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
    முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
    யாமும் பாரியும் உளமே
    குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

    கபிலர்

  • எருதே இளைய நுகம் உணராவே

    புறநானூறு

    எருதே இளைய நுகம் உணராவே
    சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
    அவல் இழியினும் மிசை ஏறினும்
    அவணது அறியுநர் யார் என உமணர்
    கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
    இசை விளங்கு கவிகை நெடியோய் திங்கள்
    நாள்நிறை மதியத்து அனையை இருள்
    யாவண தோ நின் நிழல்வாழ் வோர்க்கே

    ஔவையார்