Tag: புறநானூறு

  • உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில

    புறநானூறு

    உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
    நாஇடைப் பஃறேர் கோலச் சிவந்த
    ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை
    எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்
    மணநாறு மார்பின் மறப்போர் அகுதை
    குண்டுநீர் வரைப்பின் கூடல் அன்ன
    குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப
    ____________________________________________
    என்னா வதுகொல் தானே _______
    விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
    வினைநவில் யானை பிணிப்ப
    வேர்துளங் கினநம் ஊருள் மரனே

    கபிலர்

  • பிற ள பால் என மடுத்தலின்

    புறநானூறு

    பிற_________ள பால் என மடுத்தலின்
    ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
    கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
    ஒள்வேல் நல்லன் அதுவாய் ஆகுதல்
    அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்
    பேணுநர்ப் பெறாஅது விளியும்
    புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே

    அண்டர் மகன் குறுவழுதி

  • களிறு அணைப்பக் கலங்கின காஅ

    புறநானூறு

    களிறு அணைப்பக் கலங்கின காஅ
    தேர்ஓடத் துகள் கெழுமின தெருவு
    மா மறுகலின் மயக்குற்றன வழி
    கலங் கழாஅலின் துறை கலக்குற்றன
    தெறல் மறவர் இறை கூர்தலின்
    பொறை மலிந்து நிலன் நெளிய
    வந்தோர் பலரே வம்ப வேந்தர்
    பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
    ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்
    கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
    மையல் நோக்கின் தையலை நயந்தோர்
    அளியர் தாமே இவள் தன்னை மாரே
    செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
    நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்
    கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
    குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
    கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
    இன்ன மறவர்த் தாயினும் அன்னோ
    என்னா வதுகொல் தானே
    பன்னல் வேலிஇப் பணைநல் லூரே

  • செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை

    புறநானூறு

    செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை
    செறிவளை மகளிர் பறந்தெழுந்து
    துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு
    நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ
    புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து
    பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ
    இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே
    காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி
    கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே

  • மீன் நொடுத்து நெல் குவைஇ

    புறநானூறு

    மீன் நொடுத்து நெல் குவைஇ
    மிசை யம்பியின் மனைமறுக் குந்து
    மனைக் கவைஇய கறிமூ டையால்
    கலிச் சும்மைய கரைகலக் குறுந்து
    கலந் தந்த பொற் பரிசம்
    கழித் தொணியான் கரைசேர்க் குந்து
    மலைத் தாரமும் கடல் தாரமும்
    தலைப் பெய்து வருநர்க்கு ஈயும்
    புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
    முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன
    நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்
    புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
    தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
    வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை
    வருந்தின்று கொல்லோ தானே பருந்துஉயிர்த்து
    இடைமதில் சேக்கும் புரிசைப்
    படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே

    பரணர்

  • கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்

    புறநானூறு

    கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
    மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
    ஏனோர் மகள்கொல் இவள் என விதுப்புற்று
    என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
    திருநயத் தக்க பண்பின் இவள் நலனே
    பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
    பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
    மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்
    ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
    கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம்
    தன்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்
    பெறாஅ மையின் பேரமர் செய்தலின்
    கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா
    வாள்தக வைகலும் உழக்கும்
    மாட்சி யவர் இவள் தன்னை மாரே

    அரிசில் கிழார்

  • பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

    புறநானூறு

    பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
    ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
    வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
    ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
    கைவிட் டனரே காதலர் அதனால்
    விட்டோரை விடாஅள் திருவே
    விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

    வான்மீகியார்

  • உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்

    புறநானூறு

    உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்
    செருநவில் வேழம் கொண்மூ ஆகத்
    தேர்மா அழிதுளி தலைஇ நாம் உறக்
    கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை
    இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள்
    பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப
    மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்
    கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே
    ________________தண்ட மாப்பொறி
    மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
    நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
    மென்தோள் மகளிர் மன்றம் பேணார்
    புண்ணுவ___________________________
    _____________ அணியப் புரவி வாழ்கெனச்
    சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர
    நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
    அம்பழி பொழுதில் தமர்முகம் காணா
    _______________________ற்றொக்கான
    வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
    மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு
    உரும் எறி மலையின் இருநிலம் சேரச்
    சென்றோன் மன்ற சொ________
    _________ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப
    வஞ்சி முற்றம் வயக்கள னாக
    அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
    கொண்டனை பெரும குடபுலத்து அதரி
    பொலிக அத்தை நின் பணைதனற ளம்
    விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்ற
    புகர்முக முகவை பொலிக என்றி ஏத்திக்
    கொண்டனர் என்ப பெரியோர் யானும்
    அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற
    __________லெனாயினுங் காதலின் ஏத்தி
    நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்
    மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
    பகைவர் புகழ்ந்த அண்மை நகைவர்க்குத்
    தாவின்று உதவும் பண்பின் பேயடு
    கணநரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
    செஞ்செவி எருவை குழீஇ
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே

    கோவூர்கிழார்

  • குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்

    புறநானூறு

    குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
    பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
    வைத்த தன்றே வெறுக்கை
    _____________________________________ணை
    புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
    தொக்குஉயிர் வெளவுங் காலை
    இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

    பிரமனார்

  • விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி

    புறநானூறு

    விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி
    ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
    இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
    கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
    பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்
    கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்
    ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
    ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
    மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
    வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
    வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
    புலவுக்களம் பொலிய வேட்டோய் நின்
    நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே

    மாங்குடி கிழார்