Tag: புறநானூறு

  • வென்வேல் நது

    புறநானூறு

    வென்வேல் ___________________ நது
    முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
    அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
    யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே
    வேட்கை மீளப_______________
    ____________கும் எமக்கும் பிறர்க்கும்
    யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே

    மவேம்பற்றூர்க் குமரனார்

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்

    புறநானூறு

    கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
    காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
    நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே
    அவன் எம் இறைவன் யாம்அவன் பாணர்
    நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
    இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
    கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இதுகொண்டு
    ஈவது இலாளன் என்னாது நீயும்
    வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
    கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்
    சென்று வாய் சிவந்துமேல் வருக
    சிறுகண் யானை வேந்து விழுமுறவே

    மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

    புறநானூறு

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
    கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
    நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
    கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

    பொன் முடியார்

  • உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்

    புறநானூறு

    உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
    கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
    மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி
    இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
    தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றதன்
    கான்றுபடு கனைஎரி போலத்
    தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்

    ஔவையார்

  • எமக்கே கலங்கல் தருமே தானே

    புறநானூறு

    எமக்கே கலங்கல் தருமே தானே
    தேறல் உண்ணும் மன்னே நன்றும்
    இன்னான் மன்ற வேந்தே இனியே
    நேரார் ஆரெயில் முற்றி
    வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே

  • ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

    புறநானூறு

    ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
    ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
    பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
    கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
    பிறைநுதல் விளங்கு மொருகண் போல
    வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
    கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
    நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
    நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
    அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
    அதனால், நமரெனக் கோல்கோடாது
    பிறரெனக் குணங்கொல்லாது
    ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
    திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
    வானத் தன்ன வண்மையு மூன்றும்
    உடையை யாகி யில்லோர் கையற
    நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
    வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
    நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
    டுவளி தொகுப்ப வீண்டிய
    வடுவா ழெக்கர் மணலினும் பலவே

    மருதனிளநாகனார்

  • இன்று செலினுந் தருமே சிறுவரை

    புறநானூறு

    இன்று செலினுந் தருமே சிறுவரை
    நின்று செலினுந் தருமே பின்னும்
    முன்னே தந்தனென் என்னாது துன்னி
    வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
    யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
    தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
    அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
    இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
    களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
    அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
    பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே
    அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
    முள்ளும் நோவ உற்றாக தில்ல
    ஈவோர் அரியஇவ் உலகத்து
    வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்

    புறநானூறு

    இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
    புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
    நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
    மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
    அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று
    அரவுஉறை புற்றத்து அற்றே நாளும்
    புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
    அருகாது ஈயும் வண்மை
    உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

    மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

  • டைமுதல் புறவு சேர்ந்திருந்த

    புறநானூறு

    ______டைமுதல் புறவு சேர்ந்திருந்த
    புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
    வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
    இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன
    ________டமைந் தனனே
    அன்னன் ஆயினும் பாண நன்றும்
    வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட___
    களவுப் புளியன்ன விளை_____
    _________வாடூன் கொழுங்குறை
    கொய்குரல் அரிசியடு நெய்பெய்து அட்டுத்
    துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
    உண்டு இனி திருந்த பின்_______
    ___________தருகுவன் மாதோ
    தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
    முயல்வந்து கறிக்கும் முன்றில்
    சீறூர் மன்னனைப் பாடினை செலினே