Tag: புறம்

  • ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    புறநானூறு

    ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
    களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

    பொன்முடியார்

  • களர்ப்படு கூவல் தோண்டி நாளும்

    புறநானூறு

    களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
    புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
    தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
    பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
    ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்
    சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
    தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே

    ஔவையார்

  • பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்

    புறநானூறு

    பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
    செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு
    உயவொடு வருந்தும் மன்னே இனியே
    புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்
    முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே
    உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
    மான்உளை அன்ன குடுமித்
    தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே

    பொன்முடியார்

  • பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்

    புறநானூறு

    பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
    மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
    நன்மை நிறைந்த நயவரு பாண
    சீறூர் மன்னன் சிறியிலை எ·கம்
    வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே
    வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
    சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே
    உளங்கழி சுடர்ப்படை ஏந்தி நம் பெருவிறல்
    ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
    புன்தலை மடப்பிடி நாணக்
    குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே

    கோவூர் கிழார்

  • ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ

    புறநானூறு

    ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
    குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
    வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
    வேனல் வரி அணில் வாலத்து அன்ன
    கான ஊகின் கழன்றுகு முதுவீ
    அரியல் வான்குழல் சுரியல் தங்க
    நீரும் புல்லும் ஈயாது உமணர்
    யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
    வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
    பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு
    வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
    எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப்
    பண் கொளற்கு அருமை நோக்கி
    நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே

  • களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி

    புறநானூறு

    களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி
    அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
    ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
    நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
    விருந்து எதிர் பெறுகதில் யானே என்ஐயும்
    ஒ_________________________ வேந்தனொடு
    நாடுதரு விழுப்பகை எய்துக எனவே

    அள்ளூர் நன் முல்லையார்

  • புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்

    புறநானூறு

    புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
    சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
    கா ____________________________க்கு
    உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
    வெள்வேல் ஆவம்ஆயின் ஒள் வாள்
    கறையடி யானைக்கு அல்லது
    உறைகழிப் பறியாவேலோன் ஊரே

  • பிறர்வேல் போலா தாகி இவ்வூர்

    புறநானூறு

    பிறர்வேல் போலா தாகி இவ்வூர்
    மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
    இரும்புறம் நீறும் ஆடிக் கலந்துஇடைக்
    குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்
    மங்கல மகளிரொடு மாலை சூட்டி
    இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்
    தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து
    மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும் ஆங்கு
    இருங்கடல் தானை வேந்தர்
    பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே

    விரியூர் கிழார்

  • உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன

    புறநானூறு

    உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
    கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
    புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
    புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
    பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
    இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
    தண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை ஈயா வேலோன் ஊரே

    ஆவூர்கிழார்

  • கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்

    புறநானூறு

    கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
    வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
    நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
    புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
    கல்லா இடையன் போலக் குறிப்பின்
    இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
    தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
    நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
    இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில்
    வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின்
    காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
    போகுபலி வெண்சோறு போலத்
    தூவவும் வல்லன் அவன் தூவுங் காலே

    உறையூர் முதுகூத்தனார்