Tag: எட்டுத்தொகை

  • அடலருந் துப்பின்

    புறநானூறு

    அடலருந் துப்பின் _______________
    _____________ குருந்தே முல்லை யென்று
    இந்நான் கல்லது பூவும் இல்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையடு
    இந்நான் கல்லது உணாவும் இல்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான் கல்லது குடியும் இல்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

    மாங்குடி கிழார்

  • படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்

    புறநானூறு

    படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்
    கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்
    படைஅமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
    கடல்கண் டன்ன கண்அகன் தானை
    வென்றுஎறி முரசின் வேந்தர் என்றும்
    வண்கை எயினன் வாகை அன்ன
    இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்
    என்ஆ வதுகொல் தானே தெண்ணீர்ப்
    பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
    தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்
    காமரு காஞ்சித் துஞ்சும்
    ஏமம்சால் சிறப்பின் இப் பணைநல் லூரே

    மதுரைப் படைமங்க மன்னியார்

  • காகரு பழனக் கண்பின் அன்ன

    புறநானூறு

    காகரு பழனக் கண்பின் அன்ன
    தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
    படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
    _______________னூரே மனையோள்
    பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
    ஊணொலி அரவமொடு கைதூ வாளே
    உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
    பொலம் __________________ப்
    பரிசில் பரிசிலர்க்கு ஈய
    உரவேற் காளையும் கைதூ வானே

    மதுரைத் தமிழக் கூத்தனார்

  • நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்

    புறநானூறு

    நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
    கடிய கூறும் வேந்தே தந்தையும்
    நெடிய அல்லது பணிந்துமொழி யலனே
    இஃதுஇவர் படிவம் ஆயின் வைஎயிற்று
    அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
    மரம்படு சிறுதீப் போல
    அணங்கா யினள் தான் பிறந்த ஊர்க்கே

    மதுரை மருதனிள நாகனார்

  • நீருள் பட்ட மாரிப் பேருறை

    புறநானூறு

    நீருள் பட்ட மாரிப் பேருறை
    மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
    கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
    உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
    தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்
    உண்க என உணரா உயவிற்று ஆயினும்
    தங்கனீர் சென்மோ புலவீர் நன்றும்
    சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
    வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
    குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
    குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
    சிறிது புறப்பட்டன்றோ விலளே தன்னூர்
    வேட்டக் குடிதொறுங் கூட்டு ________
    __________________________ உடும்பு செய்
    பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
    வம்பணி யானை வேந்துதலை வரினும்
    உண்பது மன்னும் அதுவே
    பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே

  • வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்

    புறநானூறு

    வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
    கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
    கள்ளரிக்கும் குயம் சிறுசின்
    மீன் சீவும் பாண் சேரி
    வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன
    குவளை உண்கண் இவளைத் தாயே
    ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
    நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
    செந்நுதல் யானை பிணிப்ப
    வருந்தல மன் எம் பெருந்துறை மரனே

    பரணர்

  • உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில

    புறநானூறு

    உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
    நாஇடைப் பஃறேர் கோலச் சிவந்த
    ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை
    எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்
    மணநாறு மார்பின் மறப்போர் அகுதை
    குண்டுநீர் வரைப்பின் கூடல் அன்ன
    குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப
    ____________________________________________
    என்னா வதுகொல் தானே _______
    விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
    வினைநவில் யானை பிணிப்ப
    வேர்துளங் கினநம் ஊருள் மரனே

    கபிலர்

  • பிற ள பால் என மடுத்தலின்

    புறநானூறு

    பிற_________ள பால் என மடுத்தலின்
    ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
    கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
    ஒள்வேல் நல்லன் அதுவாய் ஆகுதல்
    அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்
    பேணுநர்ப் பெறாஅது விளியும்
    புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே

    அண்டர் மகன் குறுவழுதி

  • களிறு அணைப்பக் கலங்கின காஅ

    புறநானூறு

    களிறு அணைப்பக் கலங்கின காஅ
    தேர்ஓடத் துகள் கெழுமின தெருவு
    மா மறுகலின் மயக்குற்றன வழி
    கலங் கழாஅலின் துறை கலக்குற்றன
    தெறல் மறவர் இறை கூர்தலின்
    பொறை மலிந்து நிலன் நெளிய
    வந்தோர் பலரே வம்ப வேந்தர்
    பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
    ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்
    கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
    மையல் நோக்கின் தையலை நயந்தோர்
    அளியர் தாமே இவள் தன்னை மாரே
    செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
    நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்
    கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
    குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
    கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
    இன்ன மறவர்த் தாயினும் அன்னோ
    என்னா வதுகொல் தானே
    பன்னல் வேலிஇப் பணைநல் லூரே

  • செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை

    புறநானூறு

    செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை
    செறிவளை மகளிர் பறந்தெழுந்து
    துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு
    நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ
    புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து
    பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ
    இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே
    காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி
    கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே