Author: Pulan

  • ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்

    புறநானூறு

    ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
    நெல் மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின்
    படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
    மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
    கொற்ற வேந்தர் தரினும் தன்தக
    வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
    பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று
    உணங்குகலன் ஆழியின் தோன்றும்
    ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே

    குன்றூர் கிழார் மகனார்

  • ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்

    புறநானூறு

    ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்
    கவிகை மண்ணாள் செல்வ ராயினும்
    வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்
    வரலதோறு அகம் மலர
    ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
    பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
    காண்டற்கு அரியளாகி மாண்ட
    பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
    துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
    அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
    கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
    மனைச்செறிந் தனளே வாணுதல் இனியே
    அற்றன் றாகலின் தெற்றெனப் போற்றிக்
    காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
    கடுங்கண் யானை காப்பனர் அன்றி
    வருத லானார் வேந்தர் தன்னையர்
    பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
    குருதி பற்றிய வெருவரு தலையர்
    மற்றுஇவர் மறனும் இற்றால் தெற்றென
    யாரா குவர்கொல் தாமே நேரிழை
    உருத்த பல்சுணங்கு அணிந்த
    மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே

    கபிலர்

  • வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே

    புறநானூறு

    வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
    கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
    ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
    களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
    ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
    இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
    அன்னோ பெரும்பே துற்றன்று இவ் வருங்கடி மூதூர்
    அறன்இலன் மன்ற தானே விறன்மலை
    வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
    முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
    தகைவளர்த்து எடுத்த நகையடு
    பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே

    பரணர்

  • அடலருந் துப்பின்

    புறநானூறு

    அடலருந் துப்பின் _______________
    _____________ குருந்தே முல்லை யென்று
    இந்நான் கல்லது பூவும் இல்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையடு
    இந்நான் கல்லது உணாவும் இல்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான் கல்லது குடியும் இல்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

    மாங்குடி கிழார்

  • காகரு பழனக் கண்பின் அன்ன

    புறநானூறு

    காகரு பழனக் கண்பின் அன்ன
    தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
    படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
    _______________னூரே மனையோள்
    பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
    ஊணொலி அரவமொடு கைதூ வாளே
    உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
    பொலம் __________________ப்
    பரிசில் பரிசிலர்க்கு ஈய
    உரவேற் காளையும் கைதூ வானே

    மதுரைத் தமிழக் கூத்தனார்

  • நீருள் பட்ட மாரிப் பேருறை

    புறநானூறு

    நீருள் பட்ட மாரிப் பேருறை
    மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
    கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
    உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
    தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்
    உண்க என உணரா உயவிற்று ஆயினும்
    தங்கனீர் சென்மோ புலவீர் நன்றும்
    சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
    வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
    குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
    குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
    சிறிது புறப்பட்டன்றோ விலளே தன்னூர்
    வேட்டக் குடிதொறுங் கூட்டு ________
    __________________________ உடும்பு செய்
    பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
    வம்பணி யானை வேந்துதலை வரினும்
    உண்பது மன்னும் அதுவே
    பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே

  • பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

    புறநானூறு

    பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
    ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
    வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
    ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
    கைவிட் டனரே காதலர் அதனால்
    விட்டோரை விடாஅள் திருவே
    விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

    வான்மீகியார்

  • குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்

    புறநானூறு

    குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
    பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
    வைத்த தன்றே வெறுக்கை
    _____________________________________ணை
    புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
    தொக்குஉயிர் வெளவுங் காலை
    இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

    பிரமனார்

  • களரி பரந்து கள்ளி போகிப்

    புறநானூறு

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
    ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
    அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
    என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
    எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
    மன்பதைக் கெல்லாம் தானாய்த்
    தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

    தாயங்கண்ணனார்

  • மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்

    புறநானூறு

    மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
    நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
    ஊரது நிலைமையும் இதுவே
    _____________________________