Author: Pulan

  • வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்

    புறநானூறு

    வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
    புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
    வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
    சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
    ஊக நுண்கோற் செறித்த அம்பின்
    வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
    பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
    புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
    குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
    வெண்வாழ் தாய வண்காற் பந்தர்
    இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
    பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
    வலம்படு தானை வேந்தற்கு
    உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே

    ஆலத்தூர் கிழார்

  • புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்

    புறநானூறு

    புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
    சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
    கா ____________________________க்கு
    உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
    வெள்வேல் ஆவம்ஆயின் ஒள் வாள்
    கறையடி யானைக்கு அல்லது
    உறைகழிப் பறியாவேலோன் ஊரே

  • உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன

    புறநானூறு

    உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
    கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
    புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
    புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
    பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
    இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
    தண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை ஈயா வேலோன் ஊரே

    ஆவூர்கிழார்

  • பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

    புறநானூறு

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
    சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
    கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே_சென்று
    தின்பழம் பசீஇ ன்னோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • பூவற் படுவிற் கூவல் தோண்டிய

    புறநானூறு

    பூவற் படுவிற் கூவல் தோண்டிய
    செங்கண் சின்னீர் பெய்த சீறில்
    முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
    யாம் க·டு உண்டென வறிது மாசின்று
    படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
    புறவும் இதலும் அறவும் உண்கெனப்
    பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
    முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து
    ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண
    கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
    புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
    சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
    வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
    பாடினி மாலை யணிய
    வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

    ஆலங்குடி வங்கனார்

  • கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க

    புறநானூறு

    கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க
    மயில்அம் சாயல் மாஅ யோளடு
    பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
    மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்
    பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
    குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
    பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
    புன்புறப் பெடையடு வதியும்
    யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

    பெருங்குன்றூர் கிழார்

  • ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

    புறநானூறு

    ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
    பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்
    ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
    தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்
    தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
    வினவல் ஆனா வெல்போர் அண்ணல்
    யார்மகள் என்போய் கூறக் கேள் இனிக்
    குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
    நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
    வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
    தொல்குடி மன்னன் மகளே முன்நாள்
    கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
    __________________________________
    ______உழக்குக் குருதி ஓட்டிக்
    கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு
    பஞ்சியும் களையாப் புண்ணர்
    அஞ்சுதகவு உடையர் இவள் தன்னை மாரே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • தேஎங் கொண்ட வெண்மண் டையான்

    புறநானூறு

    தேஎங் கொண்ட வெண்மண் டையான்
    வீ_____________ கறக்குந்து
    அவல் வகுத்த பசுங் குடையான்
    புதன் முல்லைப் பூப்பறிக் குந்து
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    குன்றுஏறிப் புனல் பாயின்
    புறவாயால் புனல்வரை யுந்து
    ______________நொடை நறவின்
    மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
    உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
    கொடுப்பவும் கொளாஅ னெ____
    ______ர்தந்த நாகிள வேங்கையின்
    கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
    மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
    சிறுகோல் உளையும் புரவி
    ________________________யமரே

    பரணர்

  • படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்

    புறநானூறு

    படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்
    கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்
    படைஅமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
    கடல்கண் டன்ன கண்அகன் தானை
    வென்றுஎறி முரசின் வேந்தர் என்றும்
    வண்கை எயினன் வாகை அன்ன
    இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்
    என்ஆ வதுகொல் தானே தெண்ணீர்ப்
    பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
    தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்
    காமரு காஞ்சித் துஞ்சும்
    ஏமம்சால் சிறப்பின் இப் பணைநல் லூரே

    மதுரைப் படைமங்க மன்னியார்

  • காகரு பழனக் கண்பின் அன்ன

    புறநானூறு

    காகரு பழனக் கண்பின் அன்ன
    தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
    படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
    _______________னூரே மனையோள்
    பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
    ஊணொலி அரவமொடு கைதூ வாளே
    உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
    பொலம் __________________ப்
    பரிசில் பரிசிலர்க்கு ஈய
    உரவேற் காளையும் கைதூ வானே

    மதுரைத் தமிழக் கூத்தனார்